CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? வாரியம் விளக்கம்!

CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? வாரியம் விளக்கம்!


CBSE Results 2022

CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? வாரியம் விளக்கம்!
கடந்த கல்வியாண்டில் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கு இன்று (ஜூலை 4) தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகள்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), கடந்த கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை இரண்டு பிரிவாக நடத்தியது. அதாவது, கொரோனா பேரலைத்தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டில் CBSE பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு பின்னர் தேர்வுகளும் இரண்டு பகுதியாக நடைபெற்றது. அந்த வகையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வு கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்டு அதற்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டதை தொடர்ந்து 10ம் வகுப்புக்கான 2ம் கட்ட தேர்வுகள் ஏப்ரல் 26ம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரையிலும் நடைபெற்றன. இப்போது 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கும் நிலையில் இன்று (ஜூலை 4) தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது என்று சிபிஎஸ்இ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10ம் வகுப்பு மாணவர்களுக்கான 2வது டெர்ம் தேர்வு முடிவுகளை உரிய நேரத்தில் அறிவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது CBSE 10ம் வகுப்பிற்கான 2வது டெர்ம் முடிவுகள் வெளியிடப்பட்டதும்,  மாணவர்கள் cbseresults.nic.in, results.gov.in, digilocker.gov.in உள்ளிட்ட    பிற இணையதளங்களில் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளை சரிபார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBSE Results Direct Links

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.