10th 12th பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்துக்காக...
5 ஆண்டு வினா வங்கி தொகுப்பு வெளியீடு
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கு, மார்ச் 2-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையும்,
பத்தாம் வகுப்புக்கு மார்ச் 11-ம் தேதி முதல் ஏப். 6-ம் தேதி வரையும்
பொதுத்தேர்வுகள் நடைபெறுகிறது.
இதற்கான முன்னேற்பாடுகள் எல்லாம், அரசுத் தேர்வுகள் துறை மற்றும் அந்தந்த மாவட்ட
கல்வித்துற அதிகாரிகள் மூலமாக முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுத்
தேர்வின் முன்னோட்டமாக முழு பாடத்திட்டங்களும் உள்ளடக்கி, பிளஸ் 2 மற்றும்
பத்தாம் வகுப்புக்கு அரையாண்டு தேர்வுகளும் நடந்து வருகிறது.
இந்நேரத்தில், பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் திட்டமிட்டு தேர்வை எழுதுவதற்கும்,
கூடுதலாக சிறப்பு கவனம் செலுத்தி படிக்கவும், பயிற்சி பெறுவதற்கும் வினா வங்கி
முக்கிய பங்கு வகிக்கிறது.
அதற்கேற்ப, www.dge.tn.gov.in எனும் அரசு தேர்வுகள் துறை இணையதளத் தில், 2021
முதல் 2025-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் நடந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
பொதுத் தேர்வுகளின் எல்லாப் பாடக் களையும் உள்ளடக்கிய வினாத்தாள்கள்
வெளியிடப்பட்டுள்ளன. இதை பதிவிறக்கம் செய்து, சிறந்த முறையில் மாணவர்கள்
பொதுத்தேர்வுக்கு பயிற்சி பெறலாம் என்று கல்வித்துறை வட்டாரத்தில்
தெரிவிக்கப்பட்டது.
