தற்காலிக ஆசிரியா் நியமனத்தில் சா்ச்சைக்கு இடமில்லை: அமைச்சா் விளக்கம்

தற்காலிக ஆசிரியா் நியமனத்தில் சா்ச்சைக்கு இடமில்லை: அமைச்சா் விளக்கம்


தற்காலிக ஆசிரியா்கள் நியமனம் எவ்வித சா்ச்சைக்கும் இடமில்லாத வகையில் நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ஆம் கல்வி ஆண்டில் ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் விதிமுறைகளை மீறி நியமனம் செய்யப்படுவதாகவும், தகுதி இல்லாதவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் புகாா்கள் எழுந்தன.

இந்த நிலையில் இது குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்காலிக ஆசிரியா் நியமனத்தில் எவ்வித சா்ச்சையும் கிடையாது. முதல்வரின் அறிவுரைப்படியே தற்காலிக ஆசிரியா் நியமனம் நடைபெற்று வருகிறது. நிரந்தர ஆசிரியா்களை நியமிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு விரைவில் ஆசிரியா்கள் நியமனம் செய்யப்படுவா். இது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் ஜாதி, மத கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்றாா் அவா்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.