UPSC Toppers from Tamil Nadu 2020

UPSC Toppers from 

Tamil Nadu 2020


UPSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மத்திய அரசின் பல்வேறு உயர் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அமைப்பாகச் செயல்படுகிறது.
தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களைப் பணி நியமனம் செய்து வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்பட 829 இடங்களுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல் நடைபெற்றது. கரோனா ஊரடங்கினால் நேர்காணலில் தாமதம் ஏற்பட்டு, நேற்று முன்தினம் வரை நேர்காணல் நடந்து முடிந்தது.
இதன் முடிவுகளை யு.பி.எஸ்.சி இன்று வெளியிட்டது.

இந்தத் தேர்வில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மாணவர் கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7-ஆவது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். இதேபோல் இந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேசமயம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த இராமநாதன் என்பவர் மகள் ஐஸ்வர்யா என்பவர் தமிழக அளவில் இரண்டாம் இடமும், இந்திய அளவில் 47ஆவது இடமும் பிடித்துள்ளார்.

இதேபோல் பண்ருட்டி வட்டம், பண்டரக்கோட்டை சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவப்பிரகாசம் மகள், பிரியங்கா மாநில அளவில் மூன்றாம் இடத்தையும், இந்திய அளவில் 68- ஆவது இடத்தையும், பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த சரண்யா என்ற மாணவி தேசிய அளவில் 36-ஆவது இடத்தையும், புதுச்சேரி மாநிலத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.

யுபிஎஸ்சி பணிகளுக்கான தேர்வில், இந்திய அளவில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 7ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வு, 2019 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. பிப்ரவரி மாதத்தில் முதன்மைத் தேர்வும், மார்ச் மாதத்தில் நேர்காணலும் நடைபெற்றது. ஆனால் கொரோனா பொது முடக்கம் காரணமாக நேர்காணல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் அதற்கான நேர்காணல், கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் விடுபட்டவர்களுக்காக நடைபெற்று வந்தது. இன்று வெளியான தேர்வு முடிவில், நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் இந்திய அளவில் 7ஆம் இடமும், தமிழ்நாட்டில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கணேஷ் குமார் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த புன்னை நகரைச் சேர்ந்தவர். மத்திய அரசின் அமைச்சரவை செயலகத்தில் துணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.

இவர் படைத்த சாதனை குறித்து அவர் கூறுகையில், " மத்திய பாடத் திட்டத்திலேயே 12ஆம் வகுப்பு வரை படித்தேன். 10ஆம் வகுப்பு ஹரியானாவிலும், 12ஆம் வகுப்பு மதுரை கேந்திர வித்யாலயாவில் படித்தேன். பி.டெக் கான்பூரிலும், எம்.பி.ஏ., அகமதாபாத்திலும் முடித்துள்ளேன். பின்னர் அகமதாபாத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். அப்போது இந்தியன் பாரின் சர்வீஸ் பணியில் சேர வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து மத்திய அரசால் நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தேன். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் முயற்சித்து வெற்றி பெற முடியவில்லை.

இதனால், எனது வேலையை ராஜினாமா செய்து, முழு நேரமாக வீட்டிலிருந்து படிக்க தொடங்கினேன். இதற்கு எனது பெற்றோர் முழு ஆதரவு அளித்தனர். யுபிஎஸ்சி தேர்விற்குப் பிரத்யேக பயிற்சி வகுப்பிற்கு எதுவும் செல்லவில்லை. வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் வகுப்பைப் பின்பற்றி மட்டுமே படித்தேன். தேர்வு நடைபெறுவதற்கு 2 மாதத்திற்கு முன்பே தேர்வுக்கு தயாரானேன். நான் 100 இடங்களுக்குள் கிடைக்கும் என்றுதான் நினைத்தேன். இந்திய அளவில் ஏழாம் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனவே தன்னம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் இருப்பவர்கள் இத்தேர்வில் வெற்றி பெறலாம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

எண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல என்பதற்கு உதாரணமாக இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வாகியுள்ளார் மதுரையைச் சேர்ந்த பார்வை சவால் கொண்ட மாற்றுத்திறனாளி பூரண சுந்தரி. அவரின் சாதனை அனைவருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளது.

ஐஏஎஸ் தேர்வில் 286-வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

2019-ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகள் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 2019-ம் ஆண்டு எழுதிய தேர்வில் 829 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள மணிநகரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன்- ஆவுடை தேவி தம்பதி. இவர்களின் பார்வை சவால் கொண்ட மாற்றுத்திறனாளி மகள் தான் பூரண சுந்தரி.

பூரண சுந்தரியின் 5 வயதில் அவரது பார்வை நரம்பு சுருங்கியதால் பார்வையை இழந்தார்

இருந்தபோதிலும் தன்னம்பிக்கையோடு தனது கல்வியைத் தொடர வேண்டும் என்று எண்ணி ஒன்றாம் வகுப்பிலிருந்தே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுவந்துள்ளார்.

சம்மட்டிபுரத்தில் உள்ள கேஎன்பிஎம் எம்பிஎஸ் உயர்நிலைப் பள்ளியில் மதுரை ஒருங்கிணைந்த கல்வி IEDSS-ல் சிறப்புகல்வி திட்டத்தின் கீழ் பயின்றார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்னும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1092 மதிப்பெண் பெற்ற நிலையில் இளங்கலை இலக்கியம் (ஆங்கிலம்) பயின்றுவந்துள்ளார்.

சாதிக்கத் தூண்டிய சவால்கள்:

சிறு வயதிலிருந்தே ஒரு மாற்றுத்திறனாளியாக கல்வி கற்பதில் எதிர்கொள்ள வேண்டியிருந்த சவால்கள் தான் தன்னை சாதிக்கத் தூண்டியதாக பூரண சுந்தரி கூறுகிறார்.

இதனால், கடந்த 2016-ம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு, வங்கி போட்டித் தேர்வு, குடியுரிமை பணி தேர்வு என 20-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளை மனம் தளராமல் எழுதியுள்ளார்.

போட்டித் தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் கூட நிச்சயம் ஒருநாள் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு தேர்வுகளை எழுதிவந்தார். கடந்த 2018-ம் ஆண்டு வங்கித் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வரும் நிலையில் 4-வது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை பணிகளுக்கான தேர்வை எழுதியுள்ளார்.

தேர்வில் 286 இடத்தில் வெற்றியும் கண்டுள்ளார் பூரண சுந்தரி.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.