TN e-pass Cancel?

 TN e-pass Cancel? 

தமிழக மக்களுக்கு இனிப்பான செய்தி முக்கிய அதிரடியான அறிவிப்புகளை  அறிவிக்கப் போகும் முதலமைச்சர்

TN e-pass Cancel? 


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.


அவசர தேவைகளுக்காக இ-பாஸ் வழங்கப்பட்ட நிலையில், இதனால் பொதுமக்கள் அவதிப்படுவதாக அதிகளவில் புகார் எழுந்தது. அரசியல் கட்சிகளும் இ-பாஸ் முறையை ரத்து செய்ய கோரிக்கை வைத்தன.


இதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பித்த உடனே இ-பாஸ் கிடைக்கும் நடைமுறை கடந்த வாரம் முதல் நடைமுறைக்கு வந்தது.


அமைச்சர் ஆர். பி. உதயகுமார் இ-பாஸ் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "மத்திய அரசின் அறிவுறுத்தல்படி இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் இ-பாஸ் ரத்து குறித்து விரைவில் அறிவிப்பார்" என்றார்.


இந்நிலையில், தமிழகத்தில் இ-பாஸ் குறித்து இறுதி முடிவு எடுக்க 29ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு, இ-பாஸ் குறித்து முக்கிய முடிவு வெளியாகும்.


தற்போது நடைமுறையில் உள்ள இந்த இ பாஸ் முறையிலிருந்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது இதனால் வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்த முறை ரத்து செய்யப்படும் பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.