Today Educational News 26-8-2020

கடந்த ஆண்டைவிட நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Free Online Test Click Here

Updated New Test Book  Click Here

கடந்த ஆண்டைவிட நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 16,724 குறைந்துள்ளது. இந்திய அளவில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 50 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளபோதும், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 12.41% அல்லது 16,724 குறைந்துள்ளது.


10ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையில் தலையிட முடியாது:

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களுக்கு பதில் திருப்புதல்(Revision) தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்க வேண்டும் என 8 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையில் தலையிட முடியாது எனத் தெரிவித்துள்ளது. மாணவர்கள் நலன் கருதி அரசு எடுத்த கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக்கூறி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பங்களை இணையதளத்தில்  பதிவிறக்கம் செய்யலாம்:

மாணவ-மாணவிகள் தங்களது விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பங்களை இணையதளத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணி முதல் 11 ஆம் வகுப்பு வகுப்பு மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழக அரசு தேர்வு இயக்குநரகம் (Tamil Nadu Directorate of Government Examinations) செவ்வாய்க்கிழமை அறிவித்தது. மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட பின்னர் www.dge.tn.gov.in வலைத்தளத்திலிருந்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பம் மேலே குறிப்பிட்ட இணையதளத்தில் கிடைக்கும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் மாவட்ட கல்வி அலுவலர் (District Educational Officer) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் அனைத்து பாடங்களுக்கும் மறுகூட்டலுக்கு செய்ய ரூ .505 மற்றும் ஒரு தாளை மறுகூட்டல் செய்வதற்கு ரூ .205 செலுத்த வேண்டும் (உயிரியல் (Biology) பாடத்திற்கு மட்டுமே ரூ .305 செலுத்த வேண்டும்). அவர்கள் அந்த தொகையை டி.இ.ஓ (DEO office) அலுவலகத்தில் செலுத்தலாம் (டி.டி எடுக்க தேவையில்லை).


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.