11 more new medical colleges are coming to Tamil Nadu. 2021-22

 தமிழகத்திற்கு வருகிறது மேலும் 11 புதிய மருத்துவ கல்லூரிகள். 

11 more new medical colleges are coming to Tamil Nadu.



தமிழகத்தில் வரும்  2021-22 ஆம் ஆண்டு முதல் 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்தார்.


தமிழகத்தில் மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகிறது.

இதன்படி 

  • சிவகங்கை, 

  • திருவண்ணாமலை, 

  • சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகம், 

  • கோயம்புத்தூர் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை, 

  • புதுக்கோட்டை மற்றும் 

  • கரூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் 

700 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுடன் துவக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வரும் 10 அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 650 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் 1,350 கூடுதல் மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அழுத்தம் காரணமாக மிக குறுகிய காலத்தில் 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது.


தற்போது தமிழ்நாட்டிலுள்ள 3,250 மருத்துவ படிப்பு இடங்களுடன், 11 மருத்துவ கல்லூரிகளுக்கான 1,650 புதிய மருத்துவ பட்டப்படிப்பு இடங்களை சேர்த்து 2021-22 ஆண்டு முதல், மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவை மெய்ப்பிக்கும் வகையில் 6 முதல் 12 வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடாக 7.5 சதவீதம் வழங்க அரசு அவசர சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.


நாட்டிலேயே குறிப்பாக தமிழகத்தில் அதிகப்படியான மருத்துவக் கல்லூரிகள் சமீபகாலத்தில் துவங்கும் அடிக்கல் நாட்டுவது அனுமதி பெறுவதும் நடைபெற்று வருவது வரவேற்கத்தக்க ஒன்றாக அனைவராலும் பாராட்டப் படுகிறது இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது 85% தமிழக மாணவர்கள் இதன்மூலம் பயனடைவர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.