10ம் வகுப்பு தேர்வு எழுத தயாரா இருங்க மாணவர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்

10ம் வகுப்பு தேர்வு எழுத தயாரா இருங்க மாணவர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்
 நேற்றைய தினம் நமது பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்.
 சிஏ படிப்புக்கான ஆன்லைன் பயிற்சி இன்று (நேற்று) தொடங்கியது. இந்த பயிற்சியால் 75 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள். பள்ளி தொடங்கிய பின் மாணவர்களை வகுப்பறையில் அமர வைப்பதற்கு உயர்மட்ட குழு அமைத்து, அந்த குழுவின் வழி காட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும். 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படை யில் தான் உயர்கல்விக்கு தகுதி பெற முடியும். காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்க ளைக் கொண்டு, மாணவர்களை மதிப்பிட முடியாது. அதனால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பது கட்டாயம். எனவே, மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வு எழுத தயாராக இருக்க வேண்டும். தமிழகத்தில் 8 லட்சத்து 54 ஆயிரம் மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்
மாணவர்கள், தகுந்த சமூக இடை வெளியுடன் முழு பாதுகாப்புடன் தேர்வு எழுத அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.