157 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கையடக்க கணினி - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
இன்று ( 23.06.2025 ) சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக
கூட்ட அரங்கில் அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் 157 மாவட்டக் கல்வி
அலுவலர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கினார் . இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை
முதன்மைச் செயலாளர் மரு ப.சந்தர மோகன் இ.ஆ.ப. , தமிழ்நாடு பாடநூல் மற்றும்
கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநர் முனைவர் பொ.சங்கர் இ.ஆ.ப , ஒருங்கிணைந்த
பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மரு மா.ஆர்த்தி இ.ஆ.ப. மற்றும் அரசு
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.