10th Tamil Notes Of Lesson November 4th Week

10th Tamil Notes Of Lesson November 4th Week

10th Tamil Notes Of Lesson November 4th Week. Class 10th Tamil Notes Of Lesson for Teachers November 4th Week. 

 
    

  • நாள்               :           21- 11-2022 முதல் 25 -11-2022       
  • மாதம்                :           நவம்பர்
  • வாரம்               :               நான்காம் வாரம்                     
  • வகுப்பு              :           பத்தாம் வகுப்பு    
  • பாடம்               :           தமிழ்  
  • தலைப்பு          :             1. அணிகள்

அறிமுகம் 

  • ஒருவர் தம்மை அழகுப்படுத்திக் கொள்ள எவற்றை எல்லாம் மேற்கொள்வார்?
  • போன்ற வினாக்கள் கேட்டு பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி,

நோக்கம் 

அணியிலக்கணக் கூறுகளைச் செய்யுளுடன் தொடர்புப்படுத்தி அதன் சுவையுணர்ந்து நயத்தல்

ஆசிரியர் குறிப்பு 

( ஆசிரியர் செயல்பாடு)

  • அணி – என்பதன் விளக்கம் கூறல்
  • அணியின் தன்மையினை விளக்குதல்
  • பாடப்பகுதியில் உள்ள அணியின் வகைகளை விளக்குதல்.
  • உரிய உதாரணங்களுடன் அணி பொருத்தத்தை விளக்குதல்
  • மாணவர்களுக்கு புரியும் வண்ணம் உதாரணங்களை கூறி விளக்குதல்

கருத்து  வரைபடம் 

அணிகள்

 
விளக்கம்                :
( தொகுத்தல் )

அணிகள்

  • செய்யுளினை அழகு செய்வது அணி
  • தற்குறிப்பேற்ற அணி :
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது

தீவக அணி :

  • தீவகம் – விளக்கு
  • செய்யுளின் ஓர் இடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவது.
நிரல் நிறை அணி :

  • நிரல் – வரிசை  நிறை – நிறுத்துதல்
  • சொல்லையும்,பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே இணைத்துப் பொருள் கொள்வது.
தன்மை அணி :
  • இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு கூறுவது.
  • பொருள் தன்மையணி
  • குணத் தன்மையணி
  • சாதித் தன்மையணி
  • தொழிற்தன்மையணி
மாணவர் செயல்பாடு:

  • அணியைப் பற்றி அறிதல்
  • அணியின் தன்மையினை அறிதல்
  • தற்குறிப்பேற்ற அணியினை அறிதல்
  • தீவக அணியை அறிதல்
  • நிரல் நிறை அணியை அறிதல்
  • தன்மையணியை அறிதல்
மதிப்பீடு:

 LOT :
  • அணி என்பதன் பொருள் யாது?
  • ஒரு செய்யுளை அழகுற சொல்வதற்கு பயன்படுவது எது?
MOT
  • இயல்பாக நிகழும் நிகழ்வின் மீது கவிஞர் தம் கற்பனையினை மிகைப்படுத்திக் கூறும் அணி எது?
  • தன்மை அணிக்கு நடைமுறை உதாரணத்தைக் கூறுக
HOT
  • தீவக அணியை நடைமுறை வாழ்வியலோடு எவ்வாறு ஒப்பிடலாம்?
  • ஏதேனும் ஒரு அணியின் தன்மையினைக் கொண்டு ஒரு கவிதைக் கூறுக
கற்றல் விளைவுகள்                  :
  • அணியிலக்கணக் கூறுகளைச் செய்யுளுடன் தொடர்புப்படுத்தி அதன் சுவையுணர்ந்து நயத்தல்
தொடர் பணி                            :
  • புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.