12th Commerce Refresher Course Answer Key Topic 17 சுய உதவிக் குழுக்கள்

12th Standard 

Commerce Refresher Course

 Answer Key Tamil Medium 

Topic 17. சுய உதவிக் குழுக்கள்

12th Commerce Refresher Course  Answer Key Topic 17. பண்டமாற்று முறை. 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.

12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 17. பண்டமாற்று முறை வினா விடை கையேடு

12th Commerce Refresher Course Answer Key

12th Commerce Refresher Course Answer Key TM & EM

 12th Commerce Refresher Course Answer Key Topic 17

மதிப்பீட்டு வினா விடைகள் :

1. சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் அளிக்க வேறுப்பட்ட முறைகள் உள்ளன. 

  • விடை :- மூன்று

2.சுய உதவிக் குழுக்கள் என்றால் என்ன?

  • சுய உதவிக்குழு என்பது ஒரு சிறிய முறைசாரா தன்னார்வச் சங்கம் ஆகும். உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பொருளாதார உதவி செய்து கொள்ளவும்.
  • ஒருமைப்பாடு மற்றும் கூட்டுப்பொறுப்பு ஆகிய பண்புகளைப் பெறவும். இக்குழுக்கள் உதவுகின்றன. சேமிப்பைத்திரட்டி, அதன் மூலம் கடன் இக்குழுக்களின் முக்கிய நோக்கமாகும்.

3.சுய உதவிக் குழுக்களின் சிறப்பம்சங்களை விளக்குக.

  • முதலில் சேமிப்பு. பிறகு கடன் என்பது ஒவ்வொரு குழு உறுப்பினரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
  • சுய உதவிக்குழு ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் உள்ளவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்படுகிறது.
  • சுய உதவிக்குழு என்பது 10 முதல் 20 உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்படுகிறது.
  • குழுக்களைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
  • அரசியல் சார்பு இல்லாத, தாமாகவே சேர்ந்து உருவாக்கிய ஜனநாயகக் கலாச்சாரத்தைக் கொண்டது இந்தக் குழுக்கள்.

4.சுய உதவிக் குழுக்களின் நோக்கங்கள் யாவை ?

  • பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை ஊக்குவிப்பது
  • முறைசாரா கடன் கொடுப்போரின் பிடியிலிருந்து
  • பெண்களின் திறமையை உருவாக்கி ஆக்கப்பூ ன செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடச் செய்வது.
  • பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் மனங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல்
  • பெண்களிடம் தொழில் முனைவோருக்கான திறமைகளை வளர்த்தல் மற்றம் ஊக்குவித்தல்
  • கடன் வட்டம் அல்லது சுழல் மற்றும் சுழற்சி கடன் ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
  • உறுப்பினர்களின் குடும்பப் பொருளாதார நிலையை உயர்த்துதல்.
  • எதிர்கால பொருளாதார அதிகார மேலாண்மைக்கான திறமையை வளர்த்தல் மற்றும் கடன் தொடர்புகளுக்கான வசதிகளை ஏற்படுத்துதல்
  • உறுப்பினர்கள் தங்களின் பொருளாதாரச் சிக்கல்களுக்கு, அவர்களாகவே தீர்வு காண்பதற்கான விழிப்புணர்வுப் பயிற்சியினை அளித்தல்
  • குழு உறுப்பினர்களின் பொதுவான விருப்பங்களை அறிந்து, குழு நடவடிக்கைகளை முடிவு செய்தல். திறமையான மற்றும் சிக்கனமான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுதல்
  • உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் அனைத்துச் சமூகப் பொருளாதாரத் தடைகளையும் வெற்றியுடன் எதிர்கொள்ள அவர்களைத் தயார்ப்படுத்துதல்
  • வாழ்க்கை சுழற்சியில் எல்லா நிலைகளிலும், பெண்களுக்கான மனித உரிமைகளை உறுதி செய்தல்.
***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.