+2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

+2 விடைத்தாள் நகல் மற்றும் 
மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்
How to Apply For Re Total and Get Xerox Copy
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு-  மார்ச் 2020- விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் ஆகியவற்றிற்கு 24.07.2020 முதல் 30.07.2020 வரை விண்ணபிக்கலாம்- மதிப்பெண் பட்டியல் 25.07.2020 முதல் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம் என  அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!!!

பொருள் :

 சென்னை -6, அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 - விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் - பள்ளி மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் விண்ணப்பித்தல் மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு வழங்குதல்- பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல் -தொடர்பாக

அரசாணை எண்: 379, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நாள்:22.07.2020.

பார்வை

மார்ச் 2020, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை (+1 arrear subjects) மார்ச் 2020 பருவத்தில் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் ஆகியவை 16.07.2020 அன்று வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தங்கள் பள்ளி மாணவர்கள் (மற்றும்) தங்கள் தேர்வு மையத்தில் தனித்தேர்வர்களாகத் தேர்வு எழுதியோர் விடைத்தாள் நகல் கோரி அல்லது மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பினால் 24.07.2020 (வெள்ளிக் கிழமை) முதல் 30.07.2020 (வியாழக் கிழமை) வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

விண்ணப்பங்களைப் பதிவு செய்ய விரும்பும் பள்ளி மாணாக்கர், தாங்கள் பயின்ற பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள், அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் ஆன்லைனில் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே, பள்ளி மாணவர்கள்/தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யத் தங்களது பள்ளிக்கு வரும் போது. தாங்கள் அதற்கேற்ப தகுந்த ஏற்பாடுகளைத் தயாராக செய்து வைத்திருத்தல் வேண்டும்

ஒவ்வொரு பள்ளிக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ பயன்படுத்தியும். கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றியும் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்திட அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்

PDF Download link Click Here

**************************************************

Check Your 10th 11th 12th Result  2020 Click Here  
↓↓↓All Important Study Material Collections↓
Free Online Test Click Here
All New TN Text Book 2020 Click Here
12th STD Click Here
11th STD Click Here
10th STD Click Here 
****************************************************

  • KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  •  தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  •  ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.