அரசுப்பணியாளர் போட்டி தேர்வுகள் நடைபெறுமா?

அரசுப்பணியாளர் போட்டி தேர்வுகள் நடைபெறுமா?

தற்போது உலகளாவிய ஏற்பட்ட சூழலில் அரசுப் பணியாளர் தேர்வு நடைபெறும் என்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  அரசுப் பணியாளர்கள் மற்றும்  ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டது ஓராண்டுக்கு அரசுப்பணியிடங்கள் காலியாக வாய்ப்பில்லை. இதனால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர் வாணையத்தால் நடத்தப்பட்ட தேர் வுகள் நடைபெறவும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

தமிழக அரசுத் துறைகளில் ஏற்படும் காலியிடங்கள் குறித்த அறிவிப்பை முறைப்படி தெரிவித்தால் தான் தேர்வு குறித்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் நாணயம் வெளியிடும். ஓய்வு பெறுவோரின் வயது அதிகரித்த காரணத்தால், தமிழக அரசுத் துறை களில் காலியிடங்கள் ஏற்படாது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு ஓராண்டுக்கு நடைபெறுமா என்பது கேள்வி எழுந்துள்ளது.

இதனால், தலைமைச் செயலகம், அரசுத் துறைகளின் பல்வேறு முக் கிய அலுவலகங்களில் ஓராண்டுக்கு காலியிடங்களே உருவாகாது. இதனால், அரசுப் பணியாளர் தேர்வா ணையம் சார்பில் குரூப் 1, குரூப் 2, குரூப்4மற்றும் கிராம நிர்வாக அலு வலர் தேர்வுகள் நடைபெற வாய்ப் பில்லை என்று அரசுத் துறை அதி காரிகள் தெரிவிக்கின்றனர்.

தேர்வுகள் நடைபெறாத சூழ்நி லையில், அரசுப் பணிகளுக்கான தேர்வினை எழுத எதிர்நோக்கிக் காத்திருக்கும் பட்டதாரிகள் இளைஞர்களும் பெரிதும் பாதிக் கப்படுவர் என்று அரசு ஊழியர் கள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.