அடுத்த மாதம் 5-ந்தேதி திறப்பு
அரையாண்டு தேர்வுக்கு 12 நாட்கள் விடுமுறை
பள்ளிக்கல்வித்துறை
தகவல்
Half Yearly Exam Holidays - School reopen Date 2026
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் படிக்கும்
1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு அரையாண்டு
தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இவர்களுக்கான தேர்வு வருகிற 23-ந்தேதியுடன்
நிறைவு பெற உள்ளது.
தேர்வு முடிந்த பிறகு அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை தொடங்கும்.
அந்த வகையில் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதி வரை 12
நாட்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பு முடிந்து
பள்ளிகள் மீண்டும் அடுத்த மாதம் 5-ந்தேதி திறக்கப்படவுள்ளது. சமீபத்தில் மழை
காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பள்ளிகள் அடுத்த மாதம்
2-ந்தேதி திறக்கப்படும் என தகவல் வெளியாகிய நிலையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வி
ஆண்டுநாள்காட்டியில் குறிப்பிட்டிருப்பது போல அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு
அடுத்த மாதம் 5-ந்தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி அதிகாரிகள்
திட்டவட்டமாக தெரிவித்தனர்.
