TET தேர்வில் தேர்ச்சி பெறவேண்டிய
ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்கும்
பணி
பள்ளிக்கல்வித்துறை தீவிரம்
சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) விவகாரத்தில்
பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில் 2012-ம் ஆண்டுக்கு முன்னர் பணியில்
சேர்ந்த ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று தெரிவித்தி
ருந்தது. இந்த உத்தரவால், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 1,38,000 ஆசிரியர்களும்,
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 38,000 ஆசி ரியர்களும் என மொத்தம் 1,76,000 பேர்
டெட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என முதல்கட்டமாக தகவல்கள் வெளியாகி
இருந்தன.
இந்த விஷயத்தில் பள்ளிக்கல்வித்துறை அடுத்தகட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை
மேற்கொள்ளலாம் என ஆலோசனை நடத்தி வரும் சூழலில், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டிய ஆசிரியர்களின் விவரங்களை துல்லியமாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறது.
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள், தேர்ச்சி பெற வேண்டிய ஆசிரியர்களின்
விவரங்களை சேகரித்து, பள்ளிக்கல்வித்துறைக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரிகள் தொகுத்து அனுப்பி வைக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.