அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 8ம் வகுப்பு வரை 3,00,000க்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்!!!!

அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு வரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்!!!!


அரசுப் பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

தமிழக அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு வரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-


அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்!" எனும் பேருண்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ள திட்டங்களின் துணை கொண்டு கல்வியில் வெற்றியடைய வாழ்த்துகள்.


மிகுந்த உற்சாகத்தோடு மாணவர் சேர்க்கையை மேற்கொண்டு வரும் கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.