பிளஸ் 2 மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு

பிளஸ் 2 மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு




பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று மதியம் வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து தேர்வு துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.


தேர்வு எழுதியவர்களில், மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல் இன்று (ஜூன் 23) மதியம் வெளியிடப்படுகிறது. தேர்வு துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் இந்த விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.


இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டும் மேற்கண்ட இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரம் பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.