இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஜூலை 14 முதல் நியமன கலந்தாய்வு
இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கான நேரடி பணி நியமன கலந்தாய்வு ஜூலை 14
முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி துறை இயக்குநர் நரேஷ்
அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தொடக்க கல்வி துறையில் மலை சுழற்சி மாறுதல்
கலந்தாய்வு (21 ஒன்றியங்களுக்கு மட்டும்) ஜூலை 2-ல் நடைபெறும். இடைநிலை
ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியம் கல்வி மாவட்டத்துக்குள்
ஜூலை 3-ம் தேதியும், வருவாய் மாவட்டத்துக்குள் ஜூலை 4-ம் தேதியும்
நடத்தப்படும்.
இடைநிலை ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 5-ல் தொடங்கி 11-ம் தேதி
வரை நடைபெறும். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 19,
21-ம் தேதிகளிலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை
22, 23-ம் தேதிகளிலும் நடத்தப்படும்.
மேலும், பட்டதாரி ஆசிரியருக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 24 முதல் 30-ம்
தேதி வரை நடைபெறும். இதுதவிர, இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு
வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வான நபர்களுக்கான நேரடி பணி நியமன கலந்தாய்வு
ஜூலை 14 முதல் 18-ம் தேதி அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளது.
கலந்தாய்வு நடத்துவதற்கான மின் இணைப்பு, இணையதளம், இருக்கை வசதி
உள்ளிட்டஅனைத்து முன்னேற்பாடுகளையும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள
வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.