10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை முழு விவரம் இதோ!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை முழு விவரம் இதோ!

10th public exam time table


10th public exam time table ஆண்டுதோறும் மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடைபெறும். வரும் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வு அட்டவணை தீபாவளிக்கு பிறகு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன் படி, தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், இன்று 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் 2023-24ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் வரை தேதி வரை நடைபெறுகிறது. 2024 பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி 29-ம் தேதி வரை 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு நடைபெறுகிறது. மே 10-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

S.NO தேதி பாடம்
1. 26.03.2024 தமிழ், இதர மொழிப்பாடங்கள்
2. 28.03.2024 ஆங்கிலம்
3. 01.04.2024 கணிதம்
4. 04.04.2024 அறிவியல்
5. 06.04.2024 விருப்ப மொழிப்பாடம்
6. 08.04.2024 சமூக அறிவியல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.