தபால்நிலைய சேமிப்பு திட்டங்களும், வட்டி விகிதமும் – முழு விவரம் இதோ!

தபால்நிலைய சேமிப்பு திட்டங்களும், வட்டி விகிதமும் – முழு விவரம் இதோ!

தபால்நிலைய சேமிப்பு திட்டங்களும், வட்டி விகிதமும் – முழு விவரம்!

Indian post office investment schemes in Tamil



இந்திய நாட்டின் தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் குறித்தும் அவற்றிற்கான வட்டி விகிதங்கள் குறித்த விவரங்களும் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள்:

  • இந்திய தபால் நிலைய சேமிப்பு திட்டங்களையும் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறித்த விவரங்களையும் குறித்து இப்பதிவின் மூலம் காணலாம்.
  • தபால் அலுவலக சேமிப்பு கணக்கு மூலம் தனிநபர் மற்றும் கூட்டு கணக்குகளின் வாயிலாக நான்கு சதவீத வட்டி விகிதங்களை பெறலாம். இத்திட்டத்திற்கான குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 500 ஆகும். சேமிப்பை பராமரிப்பதற்காக மாதத்திற்கு ரூபாய் பத்து கட்டாய இருப்பு அவசியம் ஆக்கப்பட்டுள்ளது.
  • தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கை தொடங்குவது பயனர்களுக்கு பல்வேறு வகையான அம்சங்களிலும் பெரும் பலன்களை அளித்து வருகிறது. அதன் கீழ் தனிநபர் மற்றும் கூட்டுக் கணக்குகள் இரண்டிற்கும் ஆண்டுக்கு 6.50 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
  • தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு மூலம் வழங்கப்படும் நேர வைப்பு திட்டமானது பயனர்களுக்கு 6.90 சதவீத முதல் 7.50சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது. இத்திட்டத்திற்கான குறைந்த பட்சம் முதலீடு தொகை ரூபாய் ஆயிரம் ஆகும். இதற்கான அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.
  • தபால் அலுவலகம் மாதாந்திர வருமான திட்ட கணக்கு மூலம் 7.40% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. கணக்கை திறக்க குறைந்தபட்ச ரூபாய் 1000 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு ரூபாய் ஒன்பது லட்சம் மற்றும் கூட்டு கணக்குகளுக்கான அதிகபட்ச வரம்பு ரூபாய் 15 லட்சம் ஆகும்.
  • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஐந்து ஆண்டு இத்திட்டத்தின் மூலம் செலுத்தப்படும் தொகைக்கு 8 .20 சதவீதம் வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூபாய் ஆயிரமும் அதிகபட்ச முதலீடு ரூபாய் 35 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு மூலம் ஆண்டுக்கு ரூபாய் 7.10 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
  • சுகன்யா சம்ரிதி கணக்கு மூலமாக ஆண்டுக்கு ரூபாய் 8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூபாய் 250 முதலீடும், ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூபாய் 1.50 இலட்சமும் முதலீடு செய்யலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.