NMMS 2023 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15 பிற்பகல் 1 மணிக்கு வெளியீடு.

NMMS 2023 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15 பிற்பகல் 1 மணிக்கு வெளியீடு.

NMMS 2023 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15 பிற்பகல் 1 மணிக்கு வெளியீடு.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை பெறுவதற்கான தேர்வு ( NMMS EXAMINATION ) . 25.02.2023 அன்று நடைபெற்றது , இத்தேர்வில் 2,22,985 மாணவர்கள் பங்கு பெற்றனர் . இத்தேர்வின் முடிவுகள் 15.04.2023 அன்று பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது . எனவே இத்தேர்வெழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Results என்ற தலைப்பில் சென்று தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை பெறுவதற்கான தேர்வு ( NMMS EXAMINATION ) - முடிவுகள் பிப்ரவரி 2023 என்ற பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும் இத்தேர்விற்கான ஊக்கத்தொகைக்கான தெரிவு செய்யப்பட்ட பட்டியலும் இவ்விணையதளத்திலே National Means Cum Merit Scholarship Scheme Examination என்ற பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.