தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சிக்கு ஏற்பாடு

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சிக்கு ஏற்பாடு




அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, பெங்களூரில் ஆங்கில மொழி பயிற்சி அளிக்கப்படும்' என, தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.


சமீப ஆண்டுகளில், ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.


அதனால், ஆங்கில வழியில் பாடம் நடத்தும் தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது.


அரசு தொடக்க பள்ளிகளில், தமிழ் வழியில் மட்டுமே கற்றுத் தருவதால், மாணவர் சேர்க்கையும் குறைந்துள்ளது.


எனவே, அரசு தொடக்க பள்ளிகளில், ஆங்கில வழி கற்பித்தலை அதிகரிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


இதற்கான முன்னேற்பாடாக, அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கில மொழி கற்பித்தல் மற்றும் பேச்சு பயிற்சி தர முடிவு செய்யப்பட்டு உள்ளது.


இதற்காக, பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் வழியே, அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்பட உள்ளது.


இதுகுறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


அதில், முதற்கட்டமாக, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலுார், தஞ்சாவூர் உட்பட, 13 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.