திருப்பூரில் வடமாநில இளைஞர்கள் தமிழர்களை தாக்கினார்களா? - காவல் ஆணையர் விளக்கம்!
தொழில் போட்டியோ, வேலைவாய்ப்பு சம்பந்தமாகவோ அல்லது முன்விரோதம் காரணமாகவோ ஏற்பட்ட பிரச்னை அல்ல
திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் தமிழர்களை வட இந்தியர்கள் விரட்டுவதாக சமூக வலைதளங்களில் தவறாக செய்தி பகிரப்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலம்பாளையம் திலகர் நகரில் உள்ள ரியா பேஷன்ஸ் கம்பெனியில் வேலை செய்யும் நபர் கடந்த 14-ம் தேதி அங்குள்ள தேநீர் கடைக்கு சென்றபோது அங்கு அமர்ந்திருந்த இரண்டு நபர்கள் சிகரெட் பிடித்துள்ளனர். சிகரெட் புகை பட்டது தொடர்பாக அவர்களுக்கு இடையே சிறிய பிரச்னை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக ரியா பேஷன் கம்பெனியில் பணிபுரியும் நபர் தனது நண்பர்களை அழைத்துவந்தபோது இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
