IMPORTANT LINKS

    TN Text Books New Syllabus 2021-2022



    Kalvi TV Videos 2021-2022

     Kalvi TV New Time Table 2021-022 Click Here  


    6th Tamil Notes Of Lesson November 4th Week


    Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
    Whatsapp 8778711260 

    6th Tamil Notes Of Lesson November 4th Week

    6th Tamil Notes Of Lesson November 4th Week. Class 6 Tamil Notes Of Lesson for Teachers November 4th Week. 

     

    • நாள்               :           21 -11-2022 முதல் 25 -11-2022       
    • மாதம்           :           நவம்பர்
    • வாரம்           :              நான்காம்  வாரம்                     
    • வகுப்பு          :           ஆறாம் வகுப்பு    
    • பாடம்          :           தமிழ்  
    • தலைப்பு      :             நானிலம் படைத்தவன்
    அறிமுகம்                           
    • அன்றாட உணவுத் தேவைக்கான பொருட்களைப் பற்றி கூறி அவற்றை பெறும் வழிகளைக் கேட்டு அறிமுகம் செய்தல்
    கற்பித்தல் துணைக்கருவிகள் 
    • ணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
    நோக்கம்                            
    • தமிழர்களின் பண்டைய வணிகம் குறித்து அறிதல்
    ஆசிரியர் குறிப்பு       
    • பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
    • நானிலங்களை கூறல்
    • நானிலங்களின் தன்மையினைக் கூறல்
    • தமிழர்களின் வணிகம் பற்றிக் கூறல்
    • ஏற்றுமதி, இறக்குமதி பற்றிக் கூறல்
    • பொருட்களை வாங்குவதும், விற்பதும் வணிகம் என்பதனை உணர்த்துதல்
    • அன்றைய வணிகத்தை இன்றைய வணிகத்தோடு ஒப்பிடல்
    கருத்துரு வரைபடம்               

    நானிலம் படைத்தவன்



     


    விளக்கம்        
    நானிலம் படைத்தவன்

    • தமிழன் பெருநிலப்பரப்பைத் திருத்தி பண்படுத்தினான்
    • ஊர்,நகரம்,நாடு உருவாக்கினான்
    • நிலங்களை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என நால்வகைப்படுத்தினான்
    • அச்சம் தரும் போர்களின் வெற்றி கண்டான்
    • இமயமலையில் கொடியினை நட்டான்
    • ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான்
    • கண்டங்கள் தோறும் வணிகம் செய்தான்
    • அவன் எதற்கு அஞ்சாதவன்
    • ஆசிரியர் : முடியரசன் ( துரைராசு).
    • திராவிட நாட்டின் வானம்பாடி என அழைக்கப்பட்டவர்
    காணொளிகள்            
    • விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்
    • கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
    மாணவர் செயல்பாடு :
    • பாடப்பகுதியினை வாசித்தல்
    • புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
    • புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு அறிதல்
    • பாடலின் மையக் கருத்தை அறிதல்
    • பண்டைய தமிழர் வணிகம் பற்றி அறிதல்
    • பாடலின் நயங்களை உணர்தல்
    மதிப்பீடு                   

    LOT :
    • நானிலம் பிரித்து எழுதுக.
    • நிலம் என்பது யாது?

    MOT :
    • பண்டம் என்பது என்ன? தொடரில் அமைத்துக் கூறுக
    • தமிழன் எதற்கு அஞ்சினான்?

    HOT

    • காடுகளில் வாழ்ந்த மனிதன் எவ்வாறு படிப்படியாக நாகரிகம் அடைந்திருப்பான் எனக் கூறுக
    • பண்டைய வணிகமும், இன்றைய வணிகமும் பற்றிக் கூறுக

    கற்றல் விளைவுகள்                    
    • 614 – புதிய சொற்களை தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை  வெளிப்படுத்துதல் அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளை புரிந்து கொள்ள முயலுதல்
    • 609 – மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல் ஊகித்தறிதல் மற்றும் முடிவு செய்தல்

    தொடர் பணி              
    • பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
    • குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தலுக்குரிய நிலங்களை அறிந்து எழுதுக
    • நீங்கள் எவ்வாறு ஊக்கமடைவீர்கள் என்பதனை எழுதி வருக.

    Post a Comment

    0 Comments