தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு எவ்வளவு?

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு எவ்வளவு?

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு எவ்வளவு?


தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு சனிக்கிழமை (செப்.10) முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தாலும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் அமலில் இருக்கும். 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என நினைப்பவர்கள் விட்டுக்கொடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மின்வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து சனிக்கிழமை (செப்.10) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு 2026-27 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 

உயர்த்தப்பட்ட கட்டணம் எவ்வளவு?


முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடரும். 

200 முதல் 500 யூனிட்: இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.27.50 என்ற அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது மின் கட்டணம் செலுத்தும் போது ரூ.55 கூடுதலாகச் செலுத்த வேண்டி இருக்கும்.

இரண்டு மாதங்கள் 101 முதல் 300 யூனிட்கள் வரையிலான மின் பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.72.50-ஆகவும் (இரண்டு மாதங்களுக்கு ரூ.155), 400 யூனிட்கள் வரை மாதத்துக்கு ரூ.147.50-ஆகவும் (இரண்டு மாதங்களுக்கு ரூ.295) உயா்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் மாதத்துக்கு ரூ.297.50 (இரண்டு மாதங்களுக்கு ரூ.595) கூடுதலாகச் செலுத்த வேண்டும். 

இரண்டு மாதங்களுக்கு 501 முதல் 600 யூனிட்கள் வரை மின் நுகா்வு செய்தால், மாதத்துக்கு ரூ.155-ஆகவும்( இரண்டு மாதங்களுக்கு ரூ.310) ஆகவும், 601 முதல் 700 யூனிட்கள் வரையிலான மின் பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.275-ம் (இரண்டு மாதங்களுக்கு ரூ.550), ஆகவும், 701 முதல் 800 யூனிட்கள் வரை பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.395 ஆகவும் (இரண்டு மாதங்களுக்கு ரூ.790) ஆகவும், 801 முதல் 900 யூனிட்கள் வரை வரையிலான பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.565 ஆகவும் (இரண்டு மாதங்களுக்கு ரூ.1,130) ஆகவும் செலுத்த வேண்டும்.

இனி ஒரே மின் கட்டணம் வசூலிக்கப்படும்:

வீட்டு மின் பயன்பாட்டுக்கான மின்சாரத்தில் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டது. ஆனால், மின் நுகா்வானது 500 யூனிட்டில் இருந்து 501 ஆக அதிகரிக்கும் போது மின் கட்டணத் தொகையானது ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனிமேல் 500 யூனிட்களுக்கு மேல் ஒரு யூனிட் கூடுதலாகப் பயன்படுத்தினாலும் ரூ.656.60 கூடுதலாகச் செலுத்த வேண்டி இருந்தது. இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றியமைக்கப்பட்டு அதே விலையில் தான் கணக்கீடு செய்யப்பட்டு வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மின் கட்டண உயர்வு குறித்து சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், தற்போது இந்த மின் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.