தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு தேதி வெளியீடு!

தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு தேதி வெளியீடு!

தமிழகத்தில் உள்ள 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 12 ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக முதன்மை கல்வி அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள்:

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகளும், கல்லூரிகளும் அரசின் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் நிறைய தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்க படாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகு சென்ற ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு கண்டிப்பாக 10, 11 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடக்கும் என்று தெரிவித்து இருந்தனர். சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத் தேர்வுக்கான தேதிகளை அறிவித்து இருந்தார். இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி, மே 28 ஆம் தேதி முடியும் எனவும், அதன் செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 10 வகுப்பு பொது தேர்வுகள் மே 10 ஆம் தேதியில் இருந்து 30 வரை நடைபெற உள்ளது. 11 வகுப்பு தேர்வுகள் மே 9 முதல் 31 தேதி வரை பொது தேர்வுகள் நடக்க உள்ளது. மேலும் இதன் தேர்வு முடிவுகள் 12ஆம் வகுப்பிற்கு ஜூன் 23 ஆம் தேதியிலும், 11 ஆம் வகுப்புக்கு ஜூலை 7 ஆம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதியும் வெளியாகும் என்றும் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் இல்லை என்று முன்னரே பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகளின் தேதிகளை அறிவித்து உள்ளனர் பள்ளிக்கல்வித்துறையினர். இந்நிலையில் இந்த தேர்வுகள் அடுத்த மாதம் 5 ஆம் தேதியில் ஆரம்பித்து மே 12ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக முதன்மை கல்வி அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.