வேன் மோதி மாணவன் பலி - தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்

வேன் மோதி மாணவன் பலி - தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்


பள்ளி பேருந்து மோதி மாணவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

விபத்தை அறிந்தும் பிற்பகல் வரை தாளாளர் பள்ளிக்கு வராதது ஏன்? பள்ளிக் கல்வித்துறை சரமாரி கேள்வி...

பள்ளிகளில் வாகனங்கள் பாதுகாப்பாக இயக்குவது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்திய நிலையில், 24 மணி நேரத்திற்குள் 6 கேள்விகளுக்கு பதிலளிக்க அப்பள்ளிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று (மார்ச் 28) காலை பள்ளியின் வேன் மோதியதில் தீக்சித் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.

அவரது உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பள்ளி நிர்வாகத்தின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் மாணவர் தீக்சித்தின் உடலைப் பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவரின் உடல் அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.  

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.