IMPORTANT LINKS

    TN Text Books New Syllabus 2021-2022



    Kalvi TV Videos 2021-2022

     Kalvi TV New Time Table 2021-022 Click Here  

    Illam thedi kalvi SOP Released By TN Government


    Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
    Whatsapp 8778711260 

    Illam thedi kalvi SOP Released By TN Government

    இல்லம் தேடிக் கல்வி மையங்கள் கோவிட்-19 தடுப்பு நிலையான வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு.

    Illam thedi kalvi SOP Released By TN Government

    இல்லம் தேடிக் கல்வி மையங்கள் கோவிட்-19 தடுப்பு நிலையான வழிகாட்டு நடைமுறைகள் :

    இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்படும் பொழுது கோவிட்-19 நோய்ப் பரவல் தடுப்பிற்காக கீழ்க்கண்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும். 

    Illam thedi kalvi SOP Released By TN Government
    • 1 மையங்களுக்கு வரும் குழந்தைகள், தன்னார்வலர்கள், பெற்றோர் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். 
    • 2 மையங்களில் குழந்தைகள் அமர்வதற்கு தவறாமல் சமூக இடைவெளி வட்டங்கள் வரைந்து இருக்கவேண்டும். 
    • 3 குழந்தைகள் மையங்களுக்கு வரும்பொழுது கைகளை முழுவதும் சுத்தம் செய்துகொள்ள சோப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். இவற்றில் கைகளை சுத்தம் செய்து கொண்ட பிறகு குழந்தைகள் மையங்களுக்கு வர ஏற்பாடு செய்தல் வேண்டும்.
    • 4 கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி ( Hand sanitizer) பயன்படுத்தலாம்.
    • 5 குழந்தைகள் வகுப்பில் நெருக்கமாக அமர்வதை தவிர்க்க வேண்டும். மேலும், பாடல் மற்றும் செயல்வழிக்கற்றல் நடைபெறும் பொழுது கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். 
    • 6 இல்லம் தேடி கல்வி மையங்களை பார்வையிடும் அலுவலர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் முழுமையான முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.
    • 7 தன்னார்வலர்கள் எப்பொழுதும் முகக்கவசம் அணிந்து வகுப்புகள் நடத்த வேண்டும்.
    • 8 குழந்தைகளை கையாள வேண்டி உள்ளதால் தன்னார்வலர்கள் தவறாமல் _தடுப்பூசி_ செலுத்திக் கொண்டு இருத்தல் வேண்டும். 
    • 9 குழந்தைக்கு ஏதேனும் சளி அல்லது காய்ச்சல் தென்பட்டால் உடனடியாக மருத்துவ துறையின் உதவியை பெற்றோர்கள் நாடுவதற்கு தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்தல் வேண்டும். 
    • 10 இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு தேவைப்படும் கிருமி நாசினி மற்றும் சோப்பு ஆகியவற்றை நன்கொடையாகப் பெறுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் உதவியை கல்வித்துறை அலுவலர்கள் பெறலாம்.
    • 11 இல்லம் தேடி கல்வி மையம் செயல்படும் இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அவ்விடங்களை அவ்வபோது கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்.
    • 12 தன்னார்வலர்கள் வீட்டில் யாருக்கும் சளி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் தன்னார்வலர்கள் மையங்களுக்கு வருதல் கூடாது. மருத்துவத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

    Post a Comment

    0 Comments