12th Tamil Refresher Course Answer key
Topic 8 | இலக்கியநயம் பாராட்டுக - 1
  12th Standard Refresher Course Answer key, 12th Tamil  8 இலக்கியநயம்
  பாராட்டுக - 1, 12th Tamil All Topic Refresher Course Answer key,
  12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.
12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021-2022 , கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் - 8 இலக்கிய நயம் பாராட்டுக - 1 - வினாக்களும் விடைகளும்
12th Tamil Refresher Course Answer key தலைப்பு 8 இலக்கியநயம் பாராட்டுக - 1
Class: 12 | வகுப்பு - 12 
  
    Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  
  
    Topic :  8 இலக்கியநயம் பாராட்டுக - 1 
  
  - கற்றல் விளைவுகள் ,
 - கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள்
 - மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.
 
தலைப்பு : 8 இலக்கியநயம் பாராட்டுக - 1
மதிப்பீடு
1. கவிதையில் இடம்பெறும் நயங்கள் எவை?
கவிதையில் இடம்பெறும் நயங்களாவன.
      - மையக்கருத்து
 - திரண்ட கருத்து
 - தொடை நயம்
 - சந்தநயம்
 - அணி நயம்
 - சுவை நயம் போன்றன.
 
2. மையக்கருத்து என்றால் என்ன ? அதனை எவ்வாறு அறிந்து கொள்வது?
        பாடலில் கவிஞர் கூறக்கருதும் கருத்தே ( பொருள் ) மையக்கருத்து ஆகும்.
      
      மையக்கருத்தை அறிய
      
            கவிஞரின் உணர்திறனை எழுப்புகின்ற
        சூழ்நிலைகள் , கருத்துகள் அல்லது உணர்ச்சிகள் மற்றும் கவிதையைக்
        கட்டமைக்கும் விதம் ஆகியவற்றின் மூலம் மையக்கருத்தை அறியலாம்.
      
      3. எதுகைத் தொடை எவ்வாறு அமையப்பெறும்?
எதுகைத்தொடை :
      
                    செய்யுளின் அடிதோறும் அல்லது
        சீர்தோறும் முதலெழுத்துத் தம்முள் அளவொத்து (மாத்திரை அளவில்) இரண்டாம்
        எழுத்து ஒன்றி வருவது எதுகைத்தொடை ஆகும்.
      
      
                         
              எதுகையானது  அடி எதுகை, சீர் எதுகையாக அமையும்.
      
    