12th Tamil Refresher Course Answer key Topic 9 இலக்கிய நயம் பாராட்டுக - 2

12th Tamil STD
Refresher Course Answer key 
Topic 9 இலக்கிய நயம் பாராட்டுக - 2

12th Tamil Refresher Course Answer key Topic 9 இலக்கிய நயம் பாராட்டுக - 2, 12th Tamil Refresher Course Answer key Topic 9 பழமொழி- வாழ்க்கை நிகழ்வு12th Tamil Refresher Course Answer key Topic 17 பழமொழி- வாழ்க்கை நிகழ்வு. 12th Refresher Course Answer key Topic 18, 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner 12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 9 இலக்கிய நயம் பாராட்டுக - 2.

12th Tamil Refresher Course Answer key

12th Tamil Refresher Course Answer key தலைப்பு 17
  
  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic :  9 இலக்கிய நயம் பாராட்டுக - 2

தலைப்பு  :  9 இலக்கிய நயம் பாராட்டுக - 2

 மதிப்பீடு 


1. மெய்ப்பாடு எத்தனை வகைப்படும்? எவ்வாறு தோன்றும்?

  • மெய்ப்பாடு எட்டு வகைப்படும்.
  • நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் , பெருமிதம் , வெகுளி , உவகை  ஆகியன.
  • இவை ஒவ்வொன்றும் நான்கு பொருளில் வரும்.
  • இவற்றில் பெரும்பான்மை பெருமிதச் சுவையே பயின்று வரும்.
  • படிப்போரின் மன ஓட்டத்தைச் சார்ந்தது.
  • உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது.

2. பாரதிதாசன் பாடல் ஒன்றிற்கு இலக்கிய நயங்கள் எழுதி வரவும்.

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் 
            கழையிடை ஏறிய சாறும் 
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
            பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்  - தென்னை 
            நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் - தமிழை 
             என்னுயிர் என்பேன் கண்டீர்.
                                    - பாவேந்தர் பாரதிதாசன்
மையக்கருத்து 

  • உலகில் இனிமையான சுவையுடைய பொருள்கள் பல இருப்பினும் ' தமிழ் ' ஒன்றே இனிமையானது என்றும் ' தமிழை ' உயிர் என்றும் கூறுகிறார் பாவேந்தர்.

திரண்ட கருத்து 

  • நன்கு பழுத்த பலாப்பழத்தின் சுளையில் இனிமை இருக்கிறது. கரும்புச் சாற்றிலும் இனிமை உண்டு. தேனிலும் இனிமை  உண்டு. காய்ச்சிய வெல்லப் பாகிலும் இனிமை இருக்கிறது. பசுவின் பாலிலும் இனிமை இருக்கிறது.  இவையாவற்றிலும் இனிமை இருந்தாலும் என்னுயிரான தமிழின் இனிமை போற்றுதலுக்குரியது.

மோனை :  
  • னி -  ழை 
  • னி -  பாகிடை 
  • னி - ல்கிய 
எதுகை :
  • னி , பனி , நனி , இனி 
  • சுவை - சுவை 
சந்தம் :
  • இப்பாடலில் சுளையும் , சாறும் , தேனும் சுவையும் , பாலும் , நீரும் , எனினும் என்று 'உம்' என்ற சந்தம் அமைந்து ஓசை நயம் மிக்கதாய் உள்ளது.

3. அணி நயத்தை எவ்வாறு அறிவாய்?
         
அணிநயம்:

அணி = அழகு
  • பாடலுக்கு மென்மேலும் அழகூட்ட கையாளப்படும் நயமே அணிநயம். 
  • பாடலில் பயின்று வரும் உவமை, உருவகம், இயல்பு நவிற்சி (தன்மையணி), உயர்வு நவிற்சி, தற்குறிப்பேற்றம், வேற்றுமை போன்ற பலவகை நயங்களின் அடிப்படையில் அணி நயத்தை அறியலாம்.

***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.