12th Tamil Assignment Answers TN SCERT

12th Tamil Assignment Answers TN SCERT

12th Standard Tamil Answer key for Unit 1. TN 12th SCERT Assignment Answers. 12th Tamil Assignment Answers, 12th Standard SCERT Assignment Worksheet Download PDF. 12th Standard All Subjects Tamil Medium and English Medium SCERT Assignment for 1st Unit All Subjects. PDF available you can download it.Assignment Topic for all Subjects.

12th Tamil TN SCERT Assignment Answers

12th Tamil Assignment Answers TN SCERT

ஒப்படைப்பு

  • இயல் 1
  • பகுதி -
  • வகுப்பு :12
  • பாடம்: தமிழ்

 

பலவுள் தெரிக.

1.'இளந்தமிழே' என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்?

) வைரமுத்து

) சிற்பி பாலசுப்ரமணியம்

) கண்ணதாசன்

) பாரதியார்

Ans: ) சிற்பி பாலசுப்ரமணியம்

 

2. 'இளந்தமிழே' என்னும் நூல் எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

) ஒரு கிராமத்து நதி

) ஒளிப்பறவை

) நிலவுப்பூ

) சர்ப்பயாகம்

Ans: ) நிலவுப்பூ

 

3. சிற்பியின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் எது?

) நிலவுப்பூ

) சூரியநிழல்

) ஒரு கிராமத்து நதி

) ஒளிப்பறவை

Ans: ) ஒரு கிராமத்து நதி

 

4. 'அலையும் கவடும்' என்னும் உரைநடை நூலின் ஆசிரியர் யார்?

) பாரதிதாசன்

) பாரதியார்

) சிற்பி பாலசுப்பிரமணியம்

) தி.சு. நடராசன்

Ans: ) சிற்பி பாலசுப்பிரமணியம்

 

5. "மீண்டு மந்தப் பழமைநலம் புதுக்குதற்கு"- கவிஞர் குறிப்பிடும் பழைமை நலம்,

1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது

2) பொதிகையில் தோன்றியது

3) வள்ளல்களைத் தந்தது

) 1 மட்டும் சரி

)1.2 மட்டும் சரி

) 3 மட்டும் சரி

) 1.3 மட்டும் சரி

Ans: ) 1.3 மட்டும் சரி

 

6. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்

) யாப்பருங்கலக்காரிகை

) தண்டியலங்காரம்

) தொல்காப்பியப்

) நன்னூல்

Ans: ) தொல்காப்பியப்

 

7. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று எனையது தன்னேர் இலாத தமிழி"

இவ்வடிகள் பயின்று வந்துள்ள தொடை நயம்

) அடிமோனை, அடி எதுகை

) சீர் மோனை. சீர் எதுகை

) அடி எதுகை, சீர் மோனை

) சீர் எதுகை, அடி மோனை

Ans: ) அடி எதுகை, சீர் மோனை

 

8. பொருத்துக:

) தமிழ் அழகியல்          - 1. பரலி சு நெல்லையப்பர்

) நிலவுப்பூ                      -2. தி.சு.நடராசன்

) கிடை                             -3. சிற்பி பாலசுப்பிரமணியம்

) உய்யும்                        - 4.ராஜநாராயணம்

) 4,3,2,1

) 1,4,2,3,

) 2,4,1,3

) 2, 3, 4, 1

Ans: ) 2, 3, 4, 1

 

9. ‘தமிழ் மொழியின் நடை அழகியல்' என்னும் நூலின் ஆசிரியர் யார்?

) கி. ராஜநாராயணன்

) தி.சு.நடராசன்

) பரலி.சு. நெல்லையப்பர்

) கவிஞர் சிற்பி

Ans: ) தி.சு.நடராசன்

 

10.'கிடை' என்னும் குறு நாவலின் ஆசிரியர் யார்?

) தி.சு.நடராசன்

) மு மேத்தா

) அகிலன்

) கி ராஜநாராயணன்

Ans: ஈ) கி ராஜநாராயணன்


பகுதி -

 குறுவினா

 1. நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்துக்களைக் குறிப்பிடுக.

நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) என்றும் நடை நவின்றொழுகும் (செய் 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.

கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்.

மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே நடை எனப்படும்.

 

2. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

செங்கதிரவன் மலை உச்சியில் மாலை நேரத்தில் தலை சாய்க்கும்போது வானமெல்லாம் செந்நிறமான பூக்காடாக மாறுவது போல் உழைக்கும் தொழிலாளர்களின் கைகள் சிவந்து துன்பப்படும்.

உழைக்கும் தொழிலாளர் வியர்வை யாவும் அவர்களின் தோள்மீது முத்து முத்தாய் வீற்றிருக்கும்.

இவையாவும் வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்று கவிஞர் சிற்பி கூறுகிறார்.

 

3. விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடரமைக்க.

விடியல் வானம் வனப்பு மிகுந்தது.

 

4. கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எழுதுக.

கவிதையின் இயங்காற்றல்தான் நடை, அந்த நடையியல் வடிவமைப்பின் பகுதிகளையும், முழுமையினையும் சார்ந்தே இருக்கிறது.

நடையியல் கூறுகளுள் ஒலிக்கோலங்களும் . சொற்களின் புலமும் தொடரியல் பேரக்குகளும் மிக முக்கியமானவை.

 

5. எழுத்துப் பிழைகளை தவிர்க்க நாம் மேற்கொள்ள வேண்டியவை?

  • மொழியின் இயல்பை உணர்ந்தும் . இலக்கண விதிகளை அறிந்தும் கவனத்துடன் எழுத வேண்டும்.
  • தவறில்லாமல் எழுதச் சிறிதளவு முயற்சியும் பயிற்சியும் வேண்டும். எழுத்துகளைத் தெளிவாக உச்சரிக்கப் பழக வேண்டும். ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.

 

  

 பகுதி

 III. சிறுவினா

1. சங்கப்பாடல்களில் ஒலிக் கோளம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் -விளக்குக.

ஒலிப்பின்னல்:

எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும். இசையிலிருந்தும்தான் தொடங்குகிறது. மொழி  சார்ந்த கவிதையும் இசையோடும். இசைக்கருவியோடும்தான் பிறக்கிறது.

ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் பெறுகின்றன. இதுவே பாடலின் ஒலிப்பின்னலாகும்.

எழுத்துகள் எழுப்பும் ஒலிக்கோலம்:

படாஅம் ஈத்த கொடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக*

இந்தச் சங்கப் பாடலடிகளிலுள்ள படாஅம் . கொடாஅ . கடாஅ ஆகிய சொற்களில் வன்மையான உணர்ச்சியைக் காட்டும் விதத்தில் ,.. ஆகிய வல்லின மெய்கள் வந்து ஒலிக்கோலம் செய்கின்றன.

சொல் மீண்டும் வந்து எழுப்பும் ஒலிக்கோலம்

புணரின் புணராது பொருளே; பொருள்வயின் பிரியின் புணராது புணர்வே "

- இந்தச் சங்கப்பாடலில் ' புணர் ' என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒலிக்கோலம் செய்யும் அழகினைக் காணலாம்.

சந்த நயத்தோடு கூடிய ஒலிக்கோலம் :

" நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை "- இந்தச் சங்கப்பாடலடியில் '' கரமும் ' ' கரமும் அமைந்த 'தந்தை ' என்னும் சொல் நான்கு சீர்களிலும் நான்கு முறை அமைந்து ஒலிக்கோலம் செய்யும் அழகு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

இவ்வாறு . சங்கப்பாடல்களில் ஒலிகளும், சொற்களும் ஒலிக்கோலம் கொள்வது ஒரு பண்பாகும்.

 

2. செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்' தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

பகலெல்லாம் வெண்ணிற ஒளி வீசி வெப்பத்தினை உமிழ்கின்ற கதிரவன் அந்தி மாலையில் மேற்குத் திசையில் மறையவிருக்கும் நேரத்தில் செந்நிற ஒளிபரப்பி வான் முழுதும் செந்நிறத்தோடு விளங்குமாறு செய்கிறான்

அக்காட்சி வானம் சிவப்பு நிறத்தில் பூத்திருக்கும் பூக்காடு போல இருப்பதாய் நயம்படக் கூறுகிறார் சிற்பி அவர்கள்.

 

 3. ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

 இடம் : ' ஓங்கலிடை' எனத்தொடங்கும் பாடலில் சூரியனுக்கும் தமிழுக்கும் முதலில் ஒப்புமை கூறும்போது ' ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் என்றார் தண்டியலங்கார ஆசிரியர்.

பொருள்: சூரியனும் . தமிழும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தில் உள்ள இருளைப் போக்கும் தன்மை வாய்ந்தன.

விளக்கம் : சூரியன் உதயமால்வரையில் உலகிலுள்ள புற இருளைப் போக்குகிறது. பொதிய மலையில் தோன்றிய தமிழ் . மக்கள் அகத்திலுள்ள அறியாமை இருளைப் போக்குகிறது என்பதாம்.

 

4. பொருள் வேற்றுமை அணி சான்று தந்து விளக்குக?

அணி விளக்கம் :

இருவேறு பொருள்களுக்கிடையேயான ஒற்றுமையை முதலில் கூறிப்பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி ஆகும்.

சான்று:

" ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்து) இருளகற்றும் - ஆங்கவற்றுள். மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்.

அணிப்பொருத்தம்

தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையேயான பயன்சார்நத ஒற்றுமையை முதலில் கூறி . அவற்றுள் தமிழ் தன்னேரில்லாதது என்ற தன்மையைப் பின்னர் வேறுபடுத்திக் காட்டுவதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று.

 

5. தண்டியலங்காரம் - சிறுகுறிப்பு வரைக.

  • அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று.
  • காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது.
  • இதன் ஆசிரியர் தண்டி இவர் கி.பி. பொ.) 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
  • இந்நூல் பொதுவியல் பொருளணியியல் சொல்லணியியல் என்ற மூன்று பெரும்பிரிவுகளை உடையது.
  • இலக்கண நூலார், உரையாசிரியர்கள் பலரால் எடுத்தாளப்பட்ட  பெருமை உடையது.

 

பகுதி -

 1. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப் பற்று ஆகியவற்றை விவரிக்க

மொழிப்பற்று :

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார். நெல்லையப்பரிடம் அவர் கூறும் போது, ‘நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும், தமிழை வளர்ப்பதை கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண் மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும்.

 தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி பெற்று வளர வேண்டும். தாய்மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். வடநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக்கொள்ள முயல வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண் டும் என்கிறார்.

 சமூகப்பற்று :

சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும். அந்நிலை மாறவே ஆணும் : 9 பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள்; அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை என்கிறார். பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார். பெண்ணை வீட்டிற்குள் அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி, ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார்.

சமூகம் வளர்ச்சி அடைய தொழில் பெருகவேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும், தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார். சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பூமி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும். அதனைக் கற்று நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும். அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.

 

2. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

இளமைப் பொருந்திய தமிழின் திறத்தைக் கவிஞர் சிற்பி பின்வருமாறு பாடுகிறார்.

  • செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் மறையும் போது வானம் எனும் காடு பூக்காடாய்க் காட்சி தருகிறது.
  • உழைப்பாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாய்க் காணப்படுகிறது.
  • இக்காட்சியெல்லாம் நான் வியந்து பாட அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
  • பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே!
  • தமிழே நீ! பாண்டியனின் தமிழ்ச் சங்கத்தில் தவழ்ந்திருந்தாய்.
  • பாரி முதலான வள்ளல்கள் எழுவரை இம்மண்ணுக்குத் தந்தாய்.
  • உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கப் பாடி வா.
  • கூண்டினை உடைத்தெறிந்து வெளிவரும் சிங்கம் போல் வா.
  • குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா என்று சிற்பி தமிழின் சீரிளமையைத் திறம் வியந்து பாடுகிறார்.
*************************************

12th SCERT Assignment  Worksheets 2021-2022

       12th Standard All Subjects both Tamil Medium and English Medium TN SCERT Assignment  Worksheets 2021-2022.  SCERT-State Council of Educational Research & Training

      Post a Comment

      0 Comments
      * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.