10th Result 2020

பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் இன்று கோபிசெட்டிபாளையத்தில் அறிவித்தார்.
கடந்த வாரம் பன்னிரண்டாம் வகுப்பு எந்தவிதமான அறிவிப்பும் இன்றி தேர்வு முடிவுகள் திடீரென வெளியானது. அதனைத் தொடர்ந்து 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் பத்தாம் வகுப்பு தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். வழக்கமாக தேர்வு முடிவுகள் வந்து ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கழித்து தற்காலிக மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்படும் அந்தவகையில் பார்க்கும்போது பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் முன்கூட்டியே அதாவது ஆகஸ்ட் மாதம் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார்

*******************************************************************

10th std All Study Materials click here

11th std All Study Materials click here

12th STD All Study Materials click here

6th to 8th All Study Materials click here

9th STD All Study Materials click here

*********************************************************

  • KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  •  தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  •  ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.