பள்ளி கல்லூரிகள் திறந்த பிறகு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்.


  • பள்ளி கல்லூரிகள் திறந்த பின்பு பின்பற்றவேண்டிய விதிமுறைகள்.

  • கரோனா வைரஸ் முடிவுக்கு வந்த பிறகு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது.
  • மார்ச் 16 முதல் நாடு முழுவதும் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
  • பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலமாக வகுப்புகள் எடுக்க பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில் வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்த பின்பு பள்ளி கல்லூரிகள் திறந்த பிறகு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை குறித்த பட்டியலை மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது.
  • முதற்கட்டமாக பள்ளி கல்லூரிகளைத் இறந்த பிறகு மாணவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • ஆய்வகங்கள் கழிவறைகள் சுகாதாரம் ஆக்கப்பட வேண்டும்.
  • வகுப்பறை மற்றும் பேருந்தில் வரும்போது சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
  • அடிக்கடி கைகளை கழுவ மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
  • விளையாட்டு மைதானங்களில் விளையாடுவதை சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்.
  • மேலும் சில வழிமுறைகளை வகுத்து உள்ளது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.